மரம் வளர்ப்போம் வாருங்கள்...

மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு
மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை

அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்
பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார
அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற
செயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில்
நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000
வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று
எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம்
நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர
வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு
என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான்
என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள்
தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள்
நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம். இருப்பவர்கள்
இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு
ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு
தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...
உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல
விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும்
உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள்
இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக
அல்ல... அவருக்காக அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்...





MUKKUATHOR MEDIA
contect; 9600960496

No comments:

Post a Comment

Ads

Ads