முத்துராமன்
காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் கார்த்திக் இவரது மகன் ஆவார். இவர் 1960-1970களில் முண்ணனி நடிகராக இருந்தார். நவரச திலகம்எனவும் அழைக்கப் பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.
முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே.ஆர்.விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்ததுள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர் ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும்சிவாஜி கணேசன் ('பார் மகளே பார்', 'நெஞ்சிருக்கும் வரை', 'சிவந்த மண்' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் ('காதலிக்க நேரமில்லை') ஏவி.எம்.ராஜன் ('பதிலுக்குப் பதில்', 'கொடிமலர்') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.
இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment