subash - thevar images |
1939-ல் ஜூன் 22-ஆம் தேதி பார்வர்ட் பிளாக் கட்சியை ஆரம்பித்த நேதாஜி அதில் பசும்பொன் தேவ்ரை ஸ்தாபன உறுப்பினராக அறிவித்தார்.
அதே 1939-ல் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னைக் கடற்கரையில் நடந்த பார்வர்ட் பிளாக் மாபெரும் கூட்டத்தில் கடற்மணலில் ஆரவாரமிட்டுக் கொண்டிருந்த மக்களிடம்......
"பார்வர்ட் பிளாக் கட்சியின் சென்னை மகாணத் தலைவராக "தென்னாட்டு போஸ்" பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் செயல்படுவார்" என நேதாஜி அறிவித்தார்.
தன்னைப் போல் பெரும் தேசப்பற்றும்...
சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தும் வீரமும்...
தேச விடுதலைக்காக உயிரையும் விடும் துணிவும்..
அந்நியனை அடித்துவிரட்டி வாங்குவதே சுதந்திரம் என்னும் கொள்கையும்..
இருவருக்கும் இருந்த ஒத்த எண்ணத்தால் ..
தேவரை தன்னைப்போலவே பாவித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!
காந்தியின் நடவடிக்கையை வைத்து "உங்களுக்கு இயற்கை மரணம் இராது" என காந்திடமே கூறிய பிரபல வழக்கறிஞரும்,பெரும் சுதந்திர போராட்டத் தலைவருமான எஸ்.சீனிவாசய்யங்கார் அதே மேடையில் தேவரை பெரும் வீரர் என வாழ்த்தினார்.
பகிர்தல்: ஆர்.தியாகு
No comments:
Post a Comment