தேவர் ஜாதீயவாதி அல்ல தேசியத் தலைவர்



1937 ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இராமநாதபுரம் ராஜா சேதுபதி ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் .அவரைத் தோற்கடிக்க தேவர் ஒருவரால் தான் முடியும் என்று கருதிய காங்கிரஸ் ,வல்லபாய் பட்டேல் மூலம் தேவரை வேட்பாளராக களமிறக்கியது .

மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று நாமினேசன் செய்யும் கடைசி நாளன்று 30 நிமிடம் இருக்கும் போது கலெக்டரிடம் தேவர் நாமினேசன் தாக்கல் செய்தார் .அந்நாளில் சேதுபதியை எதிர்ப்பது சாதாரணமானது அல்ல.

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி என்பது இராமநாதபுரம் ,பரமக்குடி , முதுகுளத்தூர் தாலுகாக்கள் அடங்கியது .அன்று பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே ஒட்டுபோடமுடியும் ,அந்த பட்டாவை வழங்கியது சேதுபதியின் சமஸ்தானம் .

வடக்கே கோடிக்கும் லட்சத்திற்கும் அதிபதியாக உள்ள சேட்டுகள் எல்லாம் இராமேஸ்வரம் வந்து ஆலயவழிபாடு நடத்திவிட்டு ,சேதுபதி அரண்மனையாகிய இராமலிங்க விலாசத்திற்குப் போய் சேதுபதியின் பாதம் தொட்டு ,' சேது மகாராஜிக்கு நமஸ்காரம் 'என்று வணங்கினால் தான் இராமேஸ்வரம் யாத்திரை பூரணம் பெற்றதாக ஐதீகம் .
இப்படிப்பட்ட பாக்கியத்தை ,அனுக்கிரகத்தை பரம்பரை பரம்பரையாகப் பெற்றவர் இராமநாதபுரம் ராஜா .அவரை எதிர்த்து தேர்தலில் நிற்பது என்பது நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்கும் ஒன்றாகும் .


சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்டு வரிசெலுத்தும் பட்டாதார்கள் சேதுபதியை எதிர்த்து எப்படி ஒட்டுபோடுவார்கள் ? எனவே தேவரின் தோல்வி உறுதி ,சேதுபதியின் வெற்றி நிச்சயம் என்று ஜஸ்டிஸ் கட்சி நம்பியது .

ராஜாவை எதிர்த்து தேர்தலில் நிற்கும் தேவருக்கு வாய்ப் பூட்டு சட்டம் ,அரசியல் பற்றி பேசக்கூடாது என்று ஆங்கிலேய அரசு தடை செய்திருந்தது .

தேவருடைய தந்தையார் உக்கிரபாண்டியத் தேவர் ,சேதுபதிக்கு ஆதரவாக ஊர் ஊராகப் போய் ," என் மகன் நமது ஜாதித் தலைவரை எதிர்க்கிறான் .அவனுக்கு ஓட்டுப் போடாதீர்கள் .சேதுபதி மகாராஜாவுக்கு வாக்களித்து ஜாதிப் பெருமையை காப்பாற்றுங்கள் .ராஜபக்தியை ,ராஜவிசுவாசத்தைக் காட்டி என் மகனைத் தோற்கடியுங்கள் " என்று தீவிர பிரச்சாரம் செய்தார் .

இவ்வளவுக்கும் பிறகு அணைத்து சமுதாய மக்களின் ஆதரவினால் ராமநாதபுரம் ராஜா சேதுபதியை தோற்கடித்து பசும்பொன் தேவர் வெற்றி வாகை சூடினார் .

இந்த வெற்றியின் மூலம் தேவர் ஜாதீயவாதி அல்ல அனைத்து சமுதாய மக்களின் தேசியத் தலைவர் என்று நிருபனமாகிறார் ,

No comments:

Post a Comment

Ads

Ads