பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்கை குறிப்புகள்
[history of pasumpon muthuramalinga thevar ]
[history of pasumpon muthuramalinga thevar ]
பிறப்பு: 1908 அக்டோபர் 30
இறப்பு: 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.
பிறந்த இடம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமம்
தாய்: இந்திராணி அம்மாள்
தந்தை: உக்கிரபாண்டியத் தேவர்
வாழ்ந்த நாட்கள்: 20,075.
அதில் சிறையில் கழித்த நாட்கள்: 4,000.
------------------
தமிழகத்தின் இருபெரும் தலைவர்கள் :
இறப்பு: 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.
பிறந்த இடம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமம்
தாய்: இந்திராணி அம்மாள்
தந்தை: உக்கிரபாண்டியத் தேவர்
வாழ்ந்த நாட்கள்: 20,075.
அதில் சிறையில் கழித்த நாட்கள்: 4,000.
------------------
தமிழகத்தின் இருபெரும் தலைவர்கள் :
இன்றும் இவர்கள் பெயரை சொல்லாமல் எந்த கட்சியும் அரசியல் நடத்தமுடியாது, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காமராசரும், தேவரும். அரசியலில் இரு துருவங்களாக செயல்பட்டிருந்தாலும் மக்கள் நலன் ஒன்றயே குறிக்கோளாக வாழ்ந்தவர்கள்.
1.காமராசர்: காந்தியவாதிகளின் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்.
1.தேவர்: சுபாஷின் பார்வார்ட் பிளாக் கட்சியை சார்ந்தவர்.
1.தேவர்: சுபாஷின் பார்வார்ட் பிளாக் கட்சியை சார்ந்தவர்.
2.காமராசர்: பிறக்கும் போதும் ஏழை, இறக்கும் போதும் ஏழை.
2.தேவர்: பிறக்கும் போது செல்வந்தர், 1000 ஏக்கர் நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுத்துவிட்டு, ஏழையாய் இறந்தார்.
2.தேவர்: பிறக்கும் போது செல்வந்தர், 1000 ஏக்கர் நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுத்துவிட்டு, ஏழையாய் இறந்தார்.
3.காமராசர்: திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்.
3.தேவர்: திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்மீகவாதியாக வாழ்ந்தவர்.
3.தேவர்: திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்மீகவாதியாக வாழ்ந்தவர்.
காமராசரை முதன்முதலில் தேர்தலில் அறிமுகப்படுத்தியவர் தேவர்.. தேவரை சாதிய தலைவராக சித்தரிக்க நினைத்த காங்கிரசின் சூழ்ச்சி முறிந்தது. தேவரின் தொகுதியில் வெறும் 18ஆயிரம் வாக்குகள் மட்டுமே அவரின் சமூகத்தை சார்ந்தவர்கள், ஆனால் 2இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எப்போதும் வெற்றி பெறுவார்.. அரசு அலுவலகங்களில் தலைவர்கள் புகைப்படத்தோடு தேவர்திருமகனாரின் புகைப்படத்தையும் வைக்க எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது உத்தரவிட்டார். ஆனால், இதுவரை செயல்படுத்தப்படவில்லை…
ஓரு பிரபலம் தேவரை பற்றி இப்படி சொல்கிறார்!
தேசியபக்தி,தெய்வ பக்தி இரண்டிலும் ஓப்பில்லாதவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,”தேவர்” என்றாலே அவரைத்தான் குறிக்கும். எழுந்தால், நடந்தால்,பேசினால் அவர் சண்டமருதம்.
என் இளம் வயதில் அவரை ஒரு சிலமுறை பார்த்திருக்கிறேன்.பலமுறை அவரைப்பற்றி பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அரசியல்-ஆன்மீக வரலாற்றில் அவர் ஒரு தனி சகாப்தம்.
ஓரு முறை சீனிவாச அய்யங்கர்(அந்த காலத்து பிரபல வக்கீல் பெரும் தலைவர்) மகன் வழி பேரனோடு பேச நேர்ந்தது.
சீனிவாச அய்யங்கர் மகன் வழி பேரன் அந்த பிரபலத்திடம் சொன்னார் “தேவர் அவர்களின் தகப்பனார் பெரும் ஜமீன் தார், நிறைய நிலபுலன்கள் உண்டு, சொத்து வில்லங்கம் தொடர்பாக தேவரது வழக்குகளை என் பாட்டனார் எடுத்து நடத்தினார்.அதாவது 1927 காங்கிரஸ் மகாநாடு சென்ன்னையில் நடக்கிறது, பெரிய தலைவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தனர், மாநாட்டின் பொறுப்பாளர் என் பாட்டனார் வக்கீல் சீனிவாச அய்யங்கர். அந்த சமயத்தில் சொத்து வழக்கு சம்பந்தமாக தேவர் அவரை சந்தித்தார், அவரோ மாநாடு இருக்கிறது நான்கு வழக்கை பார்க்க நாட்கள் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கர்
தேவரை பார்த்து உரிமையுடன் அதே சீனிவாச அய்யங்கர் கேட்கிறார் ” தேவர்! ஆமாம்… நான்கு நாட்கள் சென்னையில் தானே இருக்கபோகிறீகள்?”
“ஆமாம்” என்கிறார் தேவர்,
“ஆமாம்” என்கிறார் தேவர்,
“அப்படி என்றால் என் விருந்தினர் ஒருவருக்கு உதவியாய் இருக்கவேண்டும் என வேண்டுக்கொள் இடுகிறார் சீனிவாச அய்யங்கர்.
தேவரும் ஏற்றுக்கொள்கிறார்.
சீனிவாச அய்யங்கர் சொன்னதுப்போல அவர் அந்த விருந்தினருக்கு உதவியாய் இருந்தார் மற்றும் அந்த விருந்தினருக்கும் அவருக்கும் பெரும் நட்பு ஏற்ப்பட்டது, அவர் தனது மாநிலத்துக்கு தேவரை அழைத்து சென்றார்..
தனது அன்னையிடம் உனது கடைசி மகன் வந்திருக்கிறான் என்று தேவரை காட்டினார்… அவர் வேறு யாருமில்லை நம் நேதாஜிதான் ….”நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” தான்…
இந்த சம்பவத்தை சீனிவாச அய்யங்கர் பேரனிடம் அறிந்தவர் வேறு யாருமில்லை – “நல்லி குப்புச்சாமி செட்டியார்”தான்… (நல்லி சில்க்ஸ்- சென்னை)
ஆதாரம்:-
“பசும்பொன் தேவர் கட்டுரைகள்” புத்தகம்(குமரன் பதிப்பகம்)
– அணிந்துரையில் திரு.நல்லி குப்புசாமி செட்டி (நல்லி சில்க்ஸ்)
இவ்வாறு விளக்குகிறார்.
“பசும்பொன் தேவர் கட்டுரைகள்” புத்தகம்(குமரன் பதிப்பகம்)
– அணிந்துரையில் திரு.நல்லி குப்புசாமி செட்டி (நல்லி சில்க்ஸ்)
இவ்வாறு விளக்குகிறார்.
-ஆர்.தியாகு
தேவர் ஜாதீயவாதி அல்ல தேசியத் தலைவர்:
1937 ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இராமநாதபுரம் ராஜா சேதுபதி ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் .அவரைத் தோற்கடிக்க தேவர் ஒருவரால் தான் முடியும் என்று கருதிய காங்கிரஸ் ,வல்லபாய் பட்டேல் மூலம் தேவரை வேட்பாளராக களமிறக்கியது .
மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று நாமினேசன் செய்யும் கடைசி நாளன்று 30 நிமிடம் இருக்கும் போது கலெக்டரிடம் தேவர் நாமினேசன் தாக்கல் செய்தார் .அந்நாளில் சேதுபதியை எதிர்ப்பது சாதாரணமானது அல்ல.
மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று நாமினேசன் செய்யும் கடைசி நாளன்று 30 நிமிடம் இருக்கும் போது கலெக்டரிடம் தேவர் நாமினேசன் தாக்கல் செய்தார் .அந்நாளில் சேதுபதியை எதிர்ப்பது சாதாரணமானது அல்ல.
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி என்பது இராமநாதபுரம் ,பரமக்குடி , முதுகுளத்தூர் தாலுகாக்கள் அடங்கியது .அன்று பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே ஒட்டுபோடமுடியும் ,அந்த பட்டாவை வழங்கியது சேதுபதியின் சமஸ்தானம் .
வடக்கே கோடிக்கும் லட்சத்திற்கும் அதிபதியாக உள்ள சேட்டுகள் எல்லாம் இராமேஸ்வரம் வந்து ஆலயவழிபாடு நடத்திவிட்டு ,சேதுபதி அரண்மனையாகிய இராமலிங்க விலாசத்திற்குப் போய் சேதுபதியின் பாதம் தொட்டு ,’ சேது மகாராஜிக்கு நமஸ்காரம் ‘என்று வணங்கினால் தான் இராமேஸ்வரம் யாத்திரை பூரணம் பெற்றதாக ஐதீகம் .
இப்படிப்பட்ட பாக்கியத்தை ,அனுக்கிரகத்தை பரம்பரை பரம்பரையாகப் பெற்றவர் இராமநாதபுரம் ராஜா .அவரை எதிர்த்து தேர்தலில் நிற்பது என்பது நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்கும் ஒன்றாகும் .
இப்படிப்பட்ட பாக்கியத்தை ,அனுக்கிரகத்தை பரம்பரை பரம்பரையாகப் பெற்றவர் இராமநாதபுரம் ராஜா .அவரை எதிர்த்து தேர்தலில் நிற்பது என்பது நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்கும் ஒன்றாகும் .
சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்டு வரிசெலுத்தும் பட்டாதார்கள் சேதுபதியை எதிர்த்து எப்படி ஒட்டுபோடுவார்கள் ? எனவே தேவரின் தோல்வி உறுதி ,சேதுபதியின் வெற்றி நிச்சயம் என்று ஜஸ்டிஸ் கட்சி நம்பியது .
ராஜாவை எதிர்த்து தேர்தலில் நிற்கும் தேவருக்கு வாய்ப் பூட்டு சட்டம் ,அரசியல் பற்றி பேசக்கூடாது என்று ஆங்கிலேய அரசு தடை செய்திருந்தது .
தேவருடைய தந்தையார் உக்கிரபாண்டியத் தேவர் ,சேதுபதிக்கு ஆதரவாக ஊர் ஊராகப் போய் ,” என் மகன் நமது ஜாதித் தலைவரை எதிர்க்கிறான் .அவனுக்கு ஓட்டுப் போடாதீர்கள் .சேதுபதி மகாராஜாவுக்கு வாக்களித்து ஜாதிப் பெருமையை காப்பாற்றுங்கள் .ராஜபக்தியை ,ராஜவிசுவாசத்தைக் காட்டி என் மகனைத் தோற்கடியுங்கள் ” என்று தீவிர பிரச்சாரம் செய்தார் .
இவ்வளவுக்கும் பிறகு அணைத்து சமுதாய மக்களின் ஆதரவினால் ராமநாதபுரம் ராஜா சேதுபதியை தோற்கடித்து பசும்பொன் தேவர் வெற்றி வாகை சூடினார் .
இந்த வெற்றியின் மூலம் தேவர் ஜாதீயவாதி அல்ல அனைத்து சமுதாய மக்களின் தேசியத் தலைவர் என்று நிருபனமாகிறார் ,
தமிழ் வைத்தியம் பற்றி தேவர்!
“அக்காலத்தில் வைத்தியர் ஓருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப்பார்த்து, அவன் “கீரையோ கீரை” என்று கூறும் குரலைக் கேட்டு, பக்கத்து மனிதரிடம் “இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான். இவனைச் சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்” என்று சொன்ன படியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.
அவனும் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தில் ஆதாரத்துடன் கூறப்படுகிறது.(ஒருவனின் குரலின் ஒலி வைத்தே அவனது உடல் நிலை சொல்லும் உயர்ந்த முறை பெற்றது தமிழ்)
அவனும் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தில் ஆதாரத்துடன் கூறப்படுகிறது.(ஒருவனின் குரலின் ஒலி வைத்தே அவனது உடல் நிலை சொல்லும் உயர்ந்த முறை பெற்றது தமிழ்)
இன்றைக்கு உயர்ந்த வைத்தியர்கள் என்று சொல்லுகிற டாக்டர்களெல்லாம் போதிக்கின்ற சுகாதாரத்தை ‘ஆசாரக் கோவை” என்ற சிறுநூல் அன்றே போதித்திருக்கின்றது.
பஸ்பம்,சுண்ணம்,திராவகம்,கஷாயம், செந்தூரம் என்ற முறைகள் அனைத்தும் தெளிந்து தேர்ந்து அதுமட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றும் திறமையும் பெற்றிருந்தது தமிழ்.
– திரு.பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் (13.2.1949-ல் “கண்ணகி” எனும் இதழிலில் எழுதிய கட்டுரை)
ஆதாரம்:
“பசும்பொன் தேவர் கட்டுரைகள் (குமரன் பதிப்பகம்),
கட்டுரை தலைப்பு “இல்லாதது இல்லாத முதுமொழி – தமிழ்”
“பசும்பொன் தேவர் கட்டுரைகள் (குமரன் பதிப்பகம்),
கட்டுரை தலைப்பு “இல்லாதது இல்லாத முதுமொழி – தமிழ்”
-ஆர்.தியாகு
பசும்பொன் தேவர் திருமகனாரின் கருத்து
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகும் இராமாயணமும் மகாபாரதமும்! –
எப்படி என குழப்பமாக இருக்கிறதா? – பசும்பொன் தேவர் சொல்லும் விளக்கத்தை படியுங்கள் புரியும் !
எப்படி என குழப்பமாக இருக்கிறதா? – பசும்பொன் தேவர் சொல்லும் விளக்கத்தை படியுங்கள் புரியும் !
மனித வாழ்க்கை தெய்வீகத்தைப் பெறுவதற்காகவே என்பதுதான் நாம் கையாண்ட நடைமுறை .அப்படி வருகின்ற போது தெய்வீகத்தைப் பெறுவதற்க்கு இடையூறாக இருப்பவை மூன்று ஆசைகள் .
அந்த மூவாசையைத்தான் ஞானிகள் இரண்டசாசை என்று சுருக்கினார்கள் .
அந்த மூவாசையைத்தான் ஞானிகள் இரண்டசாசை என்று சுருக்கினார்கள் .
மண் – பொன் -பெண் என்ற மூன்று ஆசையாக இருந்ததை மண்ணாசையும் பொன்னாசையும் பொருள்தான் .
மண் இருந்தாலும் பொன் கிடைக்கும் .பொன் இருந்தாலும் மண் கிடைக்கும் .ஆகையால் இரண்டையும் சேர்த்து இதைக் காஞ்சனம் என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம் .
மண் இருந்தாலும் பொன் கிடைக்கும் .பொன் இருந்தாலும் மண் கிடைக்கும் .ஆகையால் இரண்டையும் சேர்த்து இதைக் காஞ்சனம் என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம் .
பெண் என்ற ஒன்றைக் காமம் என்று வைத்தார்கள் .ஆக மூவாசை என்று வைத்த மண் -பொன் -பெண் என்ற மூன்றை காம -காஞ்சனம் என்று இரண்டாகக் குறைத்தார்கள் .
இந்த இரண்டின் மூலமும் வருகின்ற அழிவு என்ன ? என்பதைக் காட்டுவதற்காக ,அகில இந்தியாவிற்கும் தெரிவிப்பதற்காக தமிழ்நாட்டில் சிறப்பாக இலக்கியங்களின் ரூபம் காட்டுவதற்காகத் தான் இரண்டு நூல்கள் வந்தன .
காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் துரியோதனன் .
காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன் .
காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன் .
காமத்தின் மூலமாக உலகம் என்னிலை பெரும் ? என்னிலையை உடையவனும் எப்படிக் கெடுவான் ?என்பதைக் காட்டுவதற்க்காகவே இராமாயணம் ஒரு நூலாக வந்தது .
காஞ்சனம் என்ற மண்ணாசையும் ,பொன்னாசையும் வைத்து பங்காளிக்கு உரியதைக் கொடுக்க மறுக்கும் காஞ்சனம் எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதைக் காட்டுவதற்க்காகவே பாரதம் ஒரு நூலாக வந்தது .
அந்த இரண்டு முறையில் சாதாரணமான முறையில் வருகின்றவர்கள் நூலை ஆராய்ச்சி செய்வார்கள் ஆனால் பொறுப்பு வாய்ந்த மேதைகள் அந்த நூலுக்கு ஆதாரமான குறிகோளைக் கவனிப்பார்கள் .
புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை .புறத் தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம் .
புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை .புறத் தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம் .
அப்படியுள்ள நிலையில் இந்த இரண்டு நூலும் இரண்டு புதைபட்ட பொருள்களை வைத்திருக்கின்றன .
இராமாயணம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் வாதிஷ்டம் என்கிற ஞான நூலாகும் அதேபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் பகவத் கீதை என்கின்ற அதிஞான நூலாகும் .
இராமாயணம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் வாதிஷ்டம் என்கிற ஞான நூலாகும் அதேபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் பகவத் கீதை என்கின்ற அதிஞான நூலாகும் .
-பகிர்தல்: விக்னேஷ் (Vignesh Tuticorin)
இந்த தேசத்தில் போராடுகிற கூட்டத்திற்குள் ஏற்படுகிற பிளவுதான் ஆங்கிலேயனுக்கு பலமே தவிர ஆங்கிலேயனுடைய இராணுவ பலமோ, வீரமோ நம்மை அடக்கி ஆளவில்லை
– பசும்பொன் தேவர் திருமகனார்
தேவர் பற்றி எது உண்மை?
தேவர் புரட்சியாளரா? முற்போக்குவாதியா? பொதுயுடமைவாதியா? தேசியதலைவரா? சாதியவாதியா?
இதில் எது உண்மை?
இதில் எது உண்மை?
தேவர் ஒரு புரட்சியாளர்:
**********************1937-ல் 1938-ல் 1939-ல் என தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்.செளராசிடரத் தொழிலாளர்கள் தலைவராய் ஏற்றுக்கொண்டதும் இவரைத்தான்.
ஜமீன் ஒழிப்பு போராட்டம். பெரும் தரகர்களை ஒழித்து விவசாய சந்தை தொடங்கியவரும் தேவர் .
முதன்முதலில் பெண் தொழிளாலர்களுக்கு கர்ப்பகால விடுமுறை மற்றும் கூலி வாங்கித் தந்தவரும் தேவரே.
தேவர் ஒரு முற்போக்குவாதி:
**************************
**************************
மீனாட்சி அம்மன் ஆலய பிரவேசத்துக்கு,சனாதனிகளை எதிர்த்து அரிசனங்களுக்கு (தாழ்த்தப்பட்டோர்கள்) துனை நின்றார்.இன்று தாழ்த்தப்பட்டோர் தாராளமாக கோவிலுக்கு சென்று வர தேவரே காரணம்!
தேவர் ஒரு பொதுயுடமைவாதி :
************************** ***
**************************
உழுதவனுக்கே நிலம் என தனது சொத்துக்கள் பெரும்பகுதியை விவசாயிகளைக்கே விட்டுக்கொடுத்தார் (உலகில் எந்த தலைவரும் தன் சொத்துக்களை மக்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை, முதன்முதலில் பொதுவுடமையை செயலில் காட்டியத்தலைவர்)
தேவர் ஒரு தேசியத் தலைவர் :
************************** **
**************************
இவர் எங்களுக்கு மட்டும் தலைவர் அல்ல..எங்களுக்கும் மட்டும் தெய்வம் அல்ல..
– -முதன்முதலில் தேவருக்கு சிலை வைத்தது ஒரு பிள்ளைமார் கிராமம்.
– -பழனி கவுண்டர்கள் தேவரோடு நெருங்கிய தொடர்ப்பு வைத்திருந்ததால் காமராஜர் “MLA சீட்” வேண்டுமா இல்லை தேவர் நட்பு வேண்டுமா என கேட்டபோது..எங்களுக்கு “தேவர்” நட்புதான் இந்த “MLA சீட்” டோடு பெரியது என சொன்னார்கள்.
– -தேவர் எழுதிவைத்த 110 ஏக்கர் நிலத்தை ஒரு மண்கூட எடுக்காமல் அப்படியே தேவர் கல்லூரிக்கு கொடுத்தார் திரிச்சூழி குருசாமி பிள்ளை
-தேவர் வாழ்ந்த காலத்தில் நாடார்கள் பார்வர்ட் பிளாக் செயலர்களாக,திருநெல்வேலி,வி ருதுநகர்,நாகர்கோவில் என பரவி இருந்தார்கள்.பல நாடார்கள் கோவில்களுக்கு தேவரைத்தான் சிறப்பாளராக அழைப்பார்கள்
-முழுக்கமுழுக்க பள்ளர்கள் வசிக்கும் சிட்டவண்ணண்குளம் போன்ற கிராமங்களில் தேவர் படம் இல்லாத வீடே கிடையாது.
இதை படிக்கும் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் தேவர் சாதியவாதியா என்பது
-ஆர்.தியாகு
-ஆர்.தியாகு
முத்துராமலிங்க தேவர் & சுபாஷ் சந்திர போஸ்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்.
மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்தவர். தேசியவாதி, அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இரு்நதவர். மூன்று முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மிகப் பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் தேவர். உக்கிரபாண்டித் தேவர், இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன். இவருக்கு ஜானகி என்ற சகோதரியும் இருந்தார்.
தேவர் பிறந்த சில காலத்திலேயே அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சித்தியும் அடுத்த ஆண்டு மரணமடைந்தார்.
1910ம் ஆண்டு முதல் தனது பாட்டி பார்வதியம்மாள் பராமரிப்பில் கள்ளுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார் தேவர்.
தேவரின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பரான குழந்தைச்சாமி பிள்ளை, முத்துராமலிங்கத் தேவரை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தார். பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷனரி பள்ளியில் படித்தார் தேவர். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை உயர் நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.
இருப்பினும் 1924ம் ஆண்டு பிளேக் நோய் தாக்கியதால் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுத முடியாமல் போனது. இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தனது பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு திரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். 1927ம் ஆண்டு அந்த வழக்கு தேவருக்கு சாதகமாக முடிந்தது.
அந்த சமயத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. இது தேவரை பெரும் வேதனை அடையச் செய்தது.
இந்த நிலையில் அவர் அரசியலில் குதித்தார். இந்த சட்டத்தை நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாக சென்று கூட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் தேவர். இந்த சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு.
தேவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்த சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆக குறைந்தது.
1934ம் ஆண்டு அபிராமம் நகரில் மாநாடு ஒன்றைக் கூட்டினார் முத்துராமலிங்கத் தேவர். அதில் முத்துராமலிங்கத் தேவர், வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிரவர்ண தேவர், நவநீத கிருஷ்ண தேவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த சட்டத்தையே நீக்குவதற்காக போராடுவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் சட்டத்தை நீக்குவதற்குப் பதில் மிகத் தீவிரமாக இதை பயன்படுத்த ஆரம்பித்தது அப்போதைய அரசு. அப்போது சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்தது நீதிக் கட்சியாகும்.
தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது என தீர்மானித்தார் தேவர். இதையடுத்து 1936ம் ஆண்டு அவர் பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.
இந்த சமயத்தில் நடந்த மாவட்ட போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு நீதிக் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இதுதான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.
அதன் பின்னர் மாகாண போர்டு தேர்தலில் நின்றார். இந்த சமயத்தில் ராஜபாளையம் ராஜா பி.எஸ்.குமாரசாமியும் போட்டியில் குதித்தார். இதனால் யாரை ஆதரிப்பது என்பதில் காங்கிரஸாரிடேயே மோதல் வெடித்தது.
இதையடுத்து குறுக்கிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி இரு தரப்பையும் சமாதானப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்தினார். தேவர் தேர்தலிலிருந்து விலகி குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டார் தேவர். இதனால் நீதிக் கட்சி பெரும் பீதியடைந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தை விட்டு வெளியேறக் கூடாது என முத்துராமலிங்கத் தேவருக்கு தடை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் பேசவும் தடை விதிக்கப்பட்டது.
1937ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் தேவர். இதில் பெரும் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மன்னரை இந்தத் தேர்தலில் தோற்கடித்தார் தேவர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி வந்ததால், குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கும் என நம்பினார் தேவர். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி அதை நிறைவேற்றத் தவறினார்.
1939ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேர்வு செய்யப்படுவதை பட்டாபி சீதாராமையா எதிர்த்தார். ஆனால் போஸுக்கு தேவர் முழு ஆதரவு தெரிவித்தார். மேலும் தென்னிந்தியா முழுவதும் போஸுக்காக ஆதரவு திரட்டினார்.
ஆனால் காந்தியின் ஆதரவுடன் போட்டியிட்ட சீதாராமையாவுக்கு பலம் கூடியது. இதனால் போஸ் தலைவராக தேர்ந்தெடுக்ப்பட்டவுடன் ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதையடுத்து பார்வர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கினார் போஸ். குற்றப் பரம்பரைச் சட்டத்தை காங்கிரஸ் அரசு நீக்காததால் அதிருப்தியில் இருந்து வந்த தேவர், போஸுக்கு ஆதரவாக செயல்பட்டார். மதுரைக்கு சுபாஷ் சந்திர போஸ் வந்தபோது மிகப் பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டி வரவேற்பு அளித்தார். தேவருக்கு கூடிய கூட்டத்தையும் அவருக்கு இருந்த செல்வாக்கையும் பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் மிரண்டனர்.
இந்த நிலையில் அப்போது பிரபலமான மதுரா கோட்ஸ் வழக்கை தேவருக்கு எதிராக கையில் எடுத்த காங்கிரஸ் அரசு, தேவரை மதுரையை விட்டு போகக் கூடாது என தடை விதித்தது.
ஆனால் அதை மீறி 1940ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பசும்பொன் கிராமத்துக்குக் கிளம்பினார் தேவர். இதையடுத்து அவரை கைது செய்து திருச்சி சிறையில் 18 மாதங்கள் அடைத்தனர்.
பின்னர் விடுதலையான அவரை மீண்டும் கைது செய்தனர். 1945ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தான் அவரை விடுவித்தனர்.
இந்த நிலையில், 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் 1948ம் ஆண்டு போஸுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், பார்வர்ட் பிளாக் பிரிவைச் சேர்ந்தவர்களை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கினர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி தனி எதிர்க்கட்சியாக மாறியது. தமிழக பார்வர்ட் பிளாக் தலைவராக தேவர் நியமிக்கப்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும் அவரே தமிழக தலைவராக செயல்பட்டார்.
1949ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளின்போது, போஸ் இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறார். நான் அவரை சந்தித்தேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தேவர். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.
அதன் பின்னர் 1950ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் மீண்டும் அவர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். இடைப்பட்ட இந்த காலத்தில் அவரை எங்கும் காண முடியவில்லை. ஆனால் இந்த சமயத்தில் அவர் கொரியா மற்றும் சீனாவுக்குப் போயிருந்ததாக அப்போது கூறப்பட்டது.
1952ல் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் தேவர் போட்டியிட்டார். லோக்சபாவுக்கு அருப்புக்கோட்டையிலும், சட்டசபைக்கு முதுகுளத்தூரிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் லோக்சபா தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்.
1955ம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பார்வர்ட் பிளாக். தனது மரணம் வரை அவரே இந்தப் பொறுப்பில் இருந்தார்.
1959ம் ஆண்டு வாக்கில், மதுரை நகராட்சித் தேர்தலில் பார்வர்ட் பிளாக், கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் ஆகியவை இணைந்து போட்டியிட்டன. இத்தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது.
தேர்தலுக்குப் பின்னர் தேவரின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து பொது வாழ்விலிருந்து அவர் விலகினார். இந்த நிலையில் வந்த 1962ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் தேவர். ஆனால் ஒரு முறை மட்டுமே பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் உடல் நலம் இடம் கொடுக்காததால், ராஜினாமா செய்து விட்டார்.
1963ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனது 55வது பிறந்த நாளின்போது மரணமடைந்தார் தேவர்.
அவரது பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாளில் வருவதால் அதை குருபூஜையாக முக்குலத்தோர் இனத்தவர் அனுசரித்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் தேவரின் பங்கு,,, தான் ஜாதிக்காக போராடிய போராட்டமல்ல !.
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் தேவரின் பங்கு
டாக்டர். என். மகேஸ்வரி,
ஆராச்சியாளர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
மதுரை.
டாக்டர். என். மகேஸ்வரி,
ஆராச்சியாளர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
மதுரை.
இந்தியாவில் ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தியபின், அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பெரும் பகுதிகளில் புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கங்கள் தோன்றின. இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்குவதில் ஆங்கில அரசு தீவிரம் காட்டியது. 1871 ஆம் ஆண்டு பஞ்சாப், மத்திய இந்தியா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த நிரந்தர குடியட்ட்ற மக்களை அடக்கும் பொருட்டு 1871 ஆம் ஆண்டு குற்றப்பரம்பரை சட்டம் என்ற ஒரு சட்டத்தை ஆங்கில அரசு பிரகடனம் செய்தது. ஆனால், அச்சட்டத்தின் விதிமுறைகள் சென்னை மாகாணத்தில் அமுல்படுத்தவில்லை.
குற்றபரம்பரைச் சட்டம் Act III of 1971 என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி அரசாங்கம் எந்த ஒரு ஜாதியையும், எந்த ஒரு கூட்டத்தையும், ஜாமீனில் வர முடியாத பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று கருதினால், அவர்கள் மீது இச்சட்டத்தை புகுத்தலாம். அப்படி எந்த ஒரு ஜாதியின் மீதும் இச்சட்டம் பயன்படுத்தும் போது, அந்த ஜாதியினர் தங்கள் உரிமையை நிலை நாட்ட நீதி மன்றங்களுக்கு செல்ல முடியாது. 1911 – ஆம் ஆண்டு, பிரிவு 11 மற்றும் 12 இன் படி, எந்த ஒரு உருபினரும் சுதந்திரமாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல முடியாது. அன்றாடம் இரவு நேரங்களில் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் தினமும் இருமுறை தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிகின்ற போது கல்வியறிவு இல்லாத காரணத்தால், கைரேகை வைப்பது வழக்கம். எனவே, இச்சட்டம் “ரேகைச் சட்டம்” என்று அழைக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பிரமலைக் கள்ளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். இவ்வாறாக இக்குற்றபரம்பரை சட்டத்தால் பிரமலை கள்ளர்களின் தனி மனித உரிமை முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. W.J. Hatch என்பவர் இச்சட்டத்தை விமர்சிக்கும் போது, ” I was doubtful whether any other act on the statue book so far in givingthe police powers to take away a man’s freedom” என்று கூறுகிறார்.
குற்றபரம்பரைச் சட்டம் Act III of 1971 என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி அரசாங்கம் எந்த ஒரு ஜாதியையும், எந்த ஒரு கூட்டத்தையும், ஜாமீனில் வர முடியாத பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று கருதினால், அவர்கள் மீது இச்சட்டத்தை புகுத்தலாம். அப்படி எந்த ஒரு ஜாதியின் மீதும் இச்சட்டம் பயன்படுத்தும் போது, அந்த ஜாதியினர் தங்கள் உரிமையை நிலை நாட்ட நீதி மன்றங்களுக்கு செல்ல முடியாது. 1911 – ஆம் ஆண்டு, பிரிவு 11 மற்றும் 12 இன் படி, எந்த ஒரு உருபினரும் சுதந்திரமாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல முடியாது. அன்றாடம் இரவு நேரங்களில் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் தினமும் இருமுறை தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிகின்ற போது கல்வியறிவு இல்லாத காரணத்தால், கைரேகை வைப்பது வழக்கம். எனவே, இச்சட்டம் “ரேகைச் சட்டம்” என்று அழைக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பிரமலைக் கள்ளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். இவ்வாறாக இக்குற்றபரம்பரை சட்டத்தால் பிரமலை கள்ளர்களின் தனி மனித உரிமை முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. W.J. Hatch என்பவர் இச்சட்டத்தை விமர்சிக்கும் போது, ” I was doubtful whether any other act on the statue book so far in givingthe police powers to take away a man’s freedom” என்று கூறுகிறார்.
இத்தகைய கொடுமையான சட்டம் நடைமுறையில் இருந்த போடு, அதை கண்டிக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட கேரளாவை சேர்ந்த வழக்குரைஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் இச்சட்டத்தின் கொடுமைகள் பற்றயும், இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட பிரமளைகள்ளர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இச்சட்டத்தை எதிர்த்து 1920 ல் புரட்சி செய்த பெருங்காமநல்லூர் மக்கள் சார்பாகவும், தன் வாதங்களை அவர் முன் வைத்தார்.
1933 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தை சார்ந்த “ஆப்ப நாடு மறவர்கள்” மீது இக்குற்றபரம்பரை சட்டம் பாய்ந்த பொது, இச்சட்டத்தின் கொடுமைகளை தேவர் உணர்ந்தார். அது முதற்கொண்டு இச்சட்டத்தை நீக்க முழு மூச்சாக செயல்பட்டார். 1934 ஆம் ஆண்டு அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு என்பவர் தலைமையில் குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் வரதராஜுலு நாயுடு தலைமையில் ஒரு குழு அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் முகம்மது உஸ்மான் அவர்களை சந்தித்து ஆப்ப நாட்டு மறவர்கள் மீது போடப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டும்மென்று வேண்டிக்கொண்டது. ஆனால் சென்னை மாகாண ஆளுநர் முகம்மது உஸ்மான் இந்த சட்டத்தை நீக்கும் உரிமை தனக்கு இல்லையென்றும், இது குறித்து தலைமை ஆளுநரிடம் தான் சிபாரிசு செய்வதாகவும் தெரிவித்தார்.
அதன் விளைவாக 2000 ம பேர் விதிக்கப்பட்டிருந்த குற்றப்பரம்பரைச் சட்டம் 400 பேராக குறைக்கப்பட்டது. இதுபோல பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நீதிக்கட்சி ஆட்சியிலிருந்த போதும், 1911 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார்.
1936 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரையூர் மாநாட்டில் குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க வேண்டும் என்று தவர் மிகக் கடுமையாகப் பேசினார். இச்சட்டம் இந்தியாவில் வீரம் மிக்க சாதியினரான சீக்கியர்கள், மராத்தியர்கள் மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. அது போன்று தமிழ் நாட்டிலுள்ள கள்ளர்கள் மற்றும் மறவர்கள் மீது, பாய்ந்துள்ளது. அவ்வேளையில் கைரேகை வைப்பதற்கு பதிலாக கட்டை விரலை வெட்டிக் கொள்ளுங்கள். என்று தேவர் முழங்கினார்.
தேவரின் பேச்சு வேகத்தை கன்னுட்ட்ற காவல் துறையினர் இவரை பேச அனுமதிக்க கூடாதென்று நீதி மன்றத்தில் முறையீடு செய்து 144 தடை உத்தரவு பெற்றனர்.இது சம்பந்தப்பட்ட வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தன் தேவர் மேடைகளில் பேசுவது தடை செய்யப்பட்டது. இது தான் “வாய்பூட்டுச் சட்டம்” என்று அழைக்கப் பட்டது. இந்த வாய் பூட்டுச் சட்டம், தென்னிதியாவில் தேவருக்கும் மற்றும் வட இந்தியாவில் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு மட்டும் தான் போடப்பட்டது.
தேவர் பல ஊர்களில் பேசிய பேச்சின் காரணமாகவும், இச்சட்டத்தை நீக்க அவர் கொடுத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும், ராஜாஜி தலைமையிலான அரசு 1938 ஆம் சென்னை மாகாணத்தின் அணைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடமிருந்தும் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் செயல் பாடுகள் குறித்து அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிக்கையை சமர்பித்தனர்.
தேவரின் பேச்சு வேகத்தை கன்னுட்ட்ற காவல் துறையினர் இவரை பேச அனுமதிக்க கூடாதென்று நீதி மன்றத்தில் முறையீடு செய்து 144 தடை உத்தரவு பெற்றனர்.இது சம்பந்தப்பட்ட வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தன் தேவர் மேடைகளில் பேசுவது தடை செய்யப்பட்டது. இது தான் “வாய்பூட்டுச் சட்டம்” என்று அழைக்கப் பட்டது. இந்த வாய் பூட்டுச் சட்டம், தென்னிதியாவில் தேவருக்கும் மற்றும் வட இந்தியாவில் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு மட்டும் தான் போடப்பட்டது.
தேவர் பல ஊர்களில் பேசிய பேச்சின் காரணமாகவும், இச்சட்டத்தை நீக்க அவர் கொடுத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும், ராஜாஜி தலைமையிலான அரசு 1938 ஆம் சென்னை மாகாணத்தின் அணைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடமிருந்தும் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் செயல் பாடுகள் குறித்து அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிக்கையை சமர்பித்தனர்.
அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட காரணத்தால், காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. அதன் பின்னரும் தேவர் இக்குற்றபரம்பரைச் சட்ட எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். பல கிராமங்களுக்கு சென்று குற்றபரம்பரை சட்டத்தை நீக்க போராடவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உசிலம்பட்டியில் நடைபெற்ற “கள்ளர் இளைஞர் மாநாட்டில்” இக்குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தீவிரமாகப் பேசினார். அப்போது அச்சட்டத்தை நீக்க தவறிய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்தார். பிரிடிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்படவேண்டுமானால், குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த, குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்து தேசீயவாதிகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒடுக்குகிறது என்று கூறினார். சுத்தமான ரதம், மறவர்களின் நரம்புகளில் ஓடுவது உண்மையானால், “நீ கை ரேகை வைப்பதிற்க்கு பதிலாக, கை விலங்கை மாட்டிக்கொள்ள thayaaraagu” (இச்சட்டத்தை எதிர்த்து) என்று அறைகூவல் விடுத்தார். சென்னை மாகாண ஆளுநர், உசிலம்பட்டி பகுதியில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டை பார்க்கவருவதாக திட்டமிட்ட போது தேவர் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று கருது, ஜல்லிகட்டை புறக்கணிக்குமாறு பிரமளைக்கள்ளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் காரணம், காளைகளை அடக்குவதில் பிரமளைகள்ளர்கள் காடும் வீர தீரத்தைக் கண்டு, இவர்கள் மீது குற்றப்பரம்பரைச்சட்டம் புகுத்தியது சரி என்று கருதி விடுவார் என்று அஞ்சினார். இவருடைய வேண்டுகோளின் படி பிரமளைகள்ளர்கள் ஜல்லிகட்டை புறக்கணித்தனர். 1940 ஆம் ஆண்டு செப்டம்பெர் மாதம், இந்திய பாதுகாப்புக்கு சட்டைன்படி கைது செய்யப்பட்ட தேவர் 1945 ஆம் ஆண்டுவரி சிறையில் இருந்தார். 1942 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய “இந்திய பார்வர்டு பிளாக்” கட்சி தடை செய்யப்பட்டது.
இச்சட்டத்தை நீக்கவேண்டும் என்று 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய சென்னை மாகான உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர். பி.சுப்புராயன், மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினார். அம்மசோதா மெது ஆளுங்கட்சி, எதிர் கட்சி மற்றும் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர், பாதிக்கப்படாதவர் என்ற பாகுபாடின்றி இச்சட்டத்தை விளக்கிக் கொள்ள கருத்துக்களை வழங்கினார்கள். அப்போது, எதிர் கட்சியாக முஸ்லிம் லீக் செயல்பட்டது.
எதி கட்சி உறுப்பினரான பேகம் சுல்தான் மீர் அம்ருதீன் என்ற பெண்மணி கூறுகையில் “நாகரீகமான நாட்டில் உள்ள சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கரும் புள்ளி தான் இந்தச் சட்டம்” என்று கூறினார். மேலும் ஆர்.வி. சுவாமிநாதன், வி.ஐ. முனியசாமி பிள்ளை(ஆதி திராவிடர்), இராஜாராம் நாயுடு, ரெங்கா ரெட்டி மற்றும் பலர் இச்சட்டத்தை நீக்கக்கோரி சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவையில் பேசினர். அதனடிப்படையில் குற்றப்பரம்பரைச் சட்டம் ரத்துச் செய்யும் மசோதா சட்டமாக நிறைவேறியது.
இறுதியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 1947 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாள் தலைமை ஆளுநரின் ஒப்புதல் பெற்று, 1947 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் குற்றப்பரம்பரைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது.
தேவரின் குற்றப்ப்பரம்பரி சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தேவரை சாதியவாதியாக காட்ட முற்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் 89 க்கும் மேற்பட்ட ஜாதிகள் இக்கொடூர சட்டத்தின் கோரப்பிடியில் சிக்கி இருந்தனர். தமிழகத்தில் தேவரினதைத் தவிர வேப்பூர் பறையர்களும், படையட்சிகளும், குரவர்களும் கூட இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே இப்போராட்டம் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, தான் ஜாதிக்காக போராடிய போராட்டமல்ல !.
முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கைக்குறிப்பு
முத்துராமலிங்கதேவர், 1908_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30_ந்தேதி,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள். பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள். பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார்.
1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார். அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948_ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு “பிளாக்” கட்சியில் சேர்ந்தார்.
சட்டசபை வாழ்க்கை
முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937_ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப் பட்டார். பிறகு 1947_ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத் துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்தார். கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத் துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937_ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப் பட்டார். பிறகு 1947_ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத் துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்தார். கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத் துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
நேதாஜியை கவர்ந்தவர்
நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவ ராக நேதாஜி தேர்ந்து எடுக்கப் பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.
நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவ ராக நேதாஜி தேர்ந்து எடுக்கப் பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.
கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். “முத்து ராமலிங்கம், என் தம்பி” என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, “நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்” என்று வாழ்த்தினார்.
ராமநாதபுரம் கலவரம் 1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது. அப்போது ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராம லிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்.
பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார். இந்நாட்டிற்ககா வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர்.
மறைவு
அனைத்துக்கட்சியினர் அஞ்சலி
தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56_வது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார்.
மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.
கடைசி விருப்பம்
“என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்” என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம், 30_ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக் கான மக்கள் கலந்து கொண்டனர். தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அனுதாபக் கூட்டம்
அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள். அண்ணா பேசுகையில் கூறியதாவது:
அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள். அண்ணா பேசுகையில் கூறியதாவது:
“தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல் லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். “உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?” என்று சிலர் கேட்டார்கள். “அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்” என்று பதில் அளித்தேன்.”
இவ்வாறு அண்ணா கூறினார்.
இவ்வாறு அண்ணா கூறினார்.
காமராஜர்
தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், “தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரி யத்துடன் சொல்லக்கூடியவர்” என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், “நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்” என்று கூறியிருந்தார்.
தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், “தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரி யத்துடன் சொல்லக்கூடியவர்” என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், “நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்” என்று கூறியிருந்தார்.
-----------
முத்துராமலிங்க தேவர் ஒரு முறை பர்மாவுக்கு விஜயம் செய்தார் முக்கிய பிரமுகர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்..
ஆனால் பர்மாவில் வரிசையாக இளம் பெண்கள் தரையில் அமர்ந்து தங்களது தலை முடியை தரையில் விரித்திருக்க அதில் பிரமுகர்கள் நடத்து செல்வார்கள்
ஆனால் பர்மாவில் வரிசையாக இளம் பெண்கள் தரையில் அமர்ந்து தங்களது தலை முடியை தரையில் விரித்திருக்க அதில் பிரமுகர்கள் நடத்து செல்வார்கள்
தேவரையும் அவ்வாறே தலைமுடிகளின் மேல் நடந்து செல்ல வைக்க ஏற்பாடாகி இருந்தது ஆனால் அதை அறிந்த முத்துராமலிங்க தேவர் கண்டிப்பாக மறுத்து விட்டார் .. தமிழர்கள் பெண்களை தெய்வமாகவும் தாயாகவும் மதிப்பவர்கள் என்று கூறி தலை முடிகளின் மேல் நடக்க மறுத்து தரையிலேயே நடந்து சென்றார்
-------------
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்
காமராசர் வரிகட்டி வாக்காளர் ஆக முடியாத வறுமை சூழலில் அவருக்கு வரிகட்டி வாக்களராக்கி சாத்தூர் தொகுதியில் நிற்க வைத்து கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் என்ற பெருமையும் இவரைச் சாரும்
1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான தேவரை மதுரையில் கைது செய்து, இரு வாரங்களுக்கு பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்
தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த மறவர் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப் பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவருக்குச் சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.
தேவரின் கன்னிப் பேச்சு
1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.
அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வர் ஆன காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.
குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.
ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.
1936 மாவட்ட வாரிய தேர்தல்
குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.
1937 மாநில தேர்தல்
1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.
1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றிபெற்றார்.
பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.
தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்
மீனாட்சியின் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும்,சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து வணங்கினர்.
தொழிலாளர்களின் தோழனாக
1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.
காமராஜரை அரசியலில் அறிமுகம் செய்தல்
அக்காலத்தில் வரி கட்டுபவர் மட்டுமே வாக்காளர் ஆக முடியும், காமராஜர் வரிகட்டி வாக்காளர் ஆக முடியாத வறுமை சூழலில் முத்துராமலிங்க தேவர் கவனத்திற்கு காமராஜர் அறியபடுகிறார், தேவர் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி சாத்தூர் தொகுதியில் நிற்க வைத்து கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜரை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர் இதுவே காமராஜரின் முதல் தேர்தல் வெற்றி.
திரிபுரா காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்
1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் மீண்டு போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார்.
பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார்.
சிறையில்
வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.
சிறை வாசத்திற்கு பின்
மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று தேவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்து அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வந்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.
1952 பொது தேர்தல்
1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு
1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் – யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் நாக்பூரில் நடந்தது. இதில் சிங்க் – யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணை தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
1957 பொது தேர்தல்
1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.
தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியில் தோற்கடிக்கபட்டார் . இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.
இராமநாதபுரம் கலவரம்
தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.
இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தலித் சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது. அப்போது தேவர், அரிஜனங்கள் தரப்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அமைதி அறிக்கையில் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
மறுநாள் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது.
பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் குற்றமற்றவர், நிரபராதி என்று இந்த வழக்கிலிருந்து சனவரி , 1959 விடுவிக்கப்பட்டார்.
இறுதி நாட்கள்
வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ்(INDC – முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.
பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் தலைவர்கள் இறந்தநாள் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட நாளாகவே கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேவரின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட அக்டோபர் 30-ம் தேதியே அவர் மறைந்த நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும், 1957 இல் இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.
கொள்கைகள்
ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
உடல் தேசியம், உயிர் தெய்வீகம்
வீரமற்ற விவேகம் கோழைத்தனம் – விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
வீரமற்ற விவேகம் கோழைத்தனம் – விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.
ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை.
அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறந்த பேச்சாளர்
தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று – நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.
தங்க கவசம்
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2010ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.
- - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
---------------------------
குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.
ஆப்பநாடின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.
------------------
"சாதி என்பது பச்சை அநாகரிகம் சாதியையும் நிறத்தையும் பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமில்லை சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமில்லை ஆன்மீகத்துக்குமில்லை" என மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை" என்று கூறினார்.
தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம் என உரைத்தார்"ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா" என் மனம் நொந்தார்.
ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள விவசாயிகளாக ஆக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும் குடியிருப்புகள் ஊரை விட்டு தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே கட்டவெண்டுமென்றார். பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறினார். ம ர ண சா ச ன த் தி ல்' கூட ஆதிதிராவிட மக்களுக்காக தனது நிலத்தின் பெரும் பகுதியை எழுதிவைத்துவிட்டு இறந்தார்.
தனது கண்காணிப்பிலேயே பல ஆதி திராவிடச் சிறுவர்களை தனது இல்லத்திலேயே வளர்த்து அவர்களை படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்தார்.
தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம் என உரைத்தார்"ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா" என் மனம் நொந்தார்.
ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள விவசாயிகளாக ஆக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும் குடியிருப்புகள் ஊரை விட்டு தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே கட்டவெண்டுமென்றார். பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறினார். ம ர ண சா ச ன த் தி ல்' கூட ஆதிதிராவிட மக்களுக்காக தனது நிலத்தின் பெரும் பகுதியை எழுதிவைத்துவிட்டு இறந்தார்.
தனது கண்காணிப்பிலேயே பல ஆதி திராவிடச் சிறுவர்களை தனது இல்லத்திலேயே வளர்த்து அவர்களை படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்தார்.
---------------------
ராமசாமி படையாட்சியும் முத்துராமலிங்க தேவரும்
வன்னிய இனத்தின் மிக முக்கிய பிரபலமான தலைவர் ராமசாமி படையாட்சி முத்துராமலிங்க தேவரை சந்தித்து கூறுகிறார்
"தேவர் அவர்களே நீங்கள், தேவர் – வன்னியர் – கவுன்டர் ஆகிய மூன்று சாதிகளுக்கும் தலைமை தாங்கி அரசியல் நடத்த வேண்டும்
தேவர் – "ராமசாமி அவர்களே அடியேன் சமுத்திரத்து தவளையாக இருக்கிறேன், என்னை கிணற்று தவளை ஆக்கிவிட வேண்டாம் " ~அதாவது நான் தேசியவாதியாக இருக்கிறேன் என்னை சாதியவாதி ஆக்கிட வேண்டாம் என்று சொல்லி மறுத்தாராம்
மதுரையின் வடக்குமாசி வீதியின் பிரசாரத்தின் போது அண்ணாதுரை கூறியது- பசும்பொன் தேவர் மாத்திரம் அன்றைக்கு 'வன்னியர் தேவர் கவுன்டர்' என அரசியலில் இரங்கி இருந்தாரேயானால் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வேலையே இருந்திருக்காது என்றார்
-----------------------
சாதியையும், நிறத்தையும்
பார்த்து மனிதனை தாழ்வு படுத்துவது பெருங்கொடுமை.
எனக்கு விருந்து வேண்டாம்., நான்
போகிறேன்… தாழ்த்தப்பட்டவர்கள்
என்ற பிரிவினை உள்ள வீட்டில்
கை நனைக்க என் மனம் இடம்
தரவில்லை!
என்று கூறிய முத்துராமலிங்கத்தேவர்
படிக்க வசதியில்லாத 36
குழந்தைகளை தன் வீட்டிலேயே தங்க
வைத்து தன் சொந்த செலவில் படிக்க
வைத்தார். அதில் 14 குழந்தைகள்
தாழ்த்தப்பட்ட
சமூகத்தை சேர்ந்தவர்கள்!
பார்த்து மனிதனை தாழ்வு படுத்துவது பெருங்கொடுமை.
எனக்கு விருந்து வேண்டாம்., நான்
போகிறேன்… தாழ்த்தப்பட்டவர்கள்
என்ற பிரிவினை உள்ள வீட்டில்
கை நனைக்க என் மனம் இடம்
தரவில்லை!
என்று கூறிய முத்துராமலிங்கத்தேவர்
படிக்க வசதியில்லாத 36
குழந்தைகளை தன் வீட்டிலேயே தங்க
வைத்து தன் சொந்த செலவில் படிக்க
வைத்தார். அதில் 14 குழந்தைகள்
தாழ்த்தப்பட்ட
சமூகத்தை சேர்ந்தவர்கள்!
---------------------------
காமராசரை கடத்தல்…
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராளிகளை ஒடுக்குவதிலும் அழிப்பதிலும் வெள்ளையர்களுக்கு கொஞ்சமும் சலைக்காமல் (Justice Party)நீதிக்கட்சியினர் செயல்பட்டு வந்தனர்
மிட்டா,மிராசுகளும்,ஜமீன்தாரிகளும்,நிறைந்த அந்த கட்சி அடியாட்களைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டங்களில் கலகம் உருவாக்குவது.விடுதலை வீரர்களை கடத்துவது, போராளிகளை காட்டிகொடுப்பது என வீர,தீர செயல்களில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர்.அதற்கு வெகுமதியாக பிரிடீஷ் அரசாங்கத்திடம் இருந்து பதவிகளும், அதிகாரமும் தாரளாமாக கிடைத்தது.
அப்படிப்பட்ட நீதிக்கட்சியின் கும்பல் ஒன்று காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடக்கூடிய காமராசரை கடத்திச் சென்று விருதுநகரின் ஒதுக்குப் புறத்தில் இருந்த பழைய வீடு ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர்.விருதுநகரில் அன்றைய தினம் மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதில் முத்துராமலிங்கத் தேவர் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.
தேவர் பெருமகனார் வந்து சேர்ந்தார். அவர் மேடை ஏறுவதற்கு முன்பாக-காமராசரை காணவில்லை மர்மமாக உள்ளது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது.
தேவர் பெருமகனார் வந்து சேர்ந்தார். அவர் மேடை ஏறுவதற்கு முன்பாக-காமராசரை காணவில்லை மர்மமாக உள்ளது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது.
தேவர் திருமகனார் கணப் பொழுதில் இது நீதிக்கட்சியின் சதிச்செயல் என்பதை உணர்ந்து கொண்டு மேடை ஏறினார்.
பொதுக் கூட்டத் திடலில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்தனர்.ஒலிப்பெறுக்கியை கையில் பிடித்த தேவர்திருமகனார்
பொதுக் கூட்டத் திடலில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்தனர்.ஒலிப்பெறுக்கியை கையில் பிடித்த தேவர்திருமகனார்
"நான் இப்போது என் உரையை தொடங்க இருக்கிறேன்! நான் பேச்சை ஆரம்பித்து முடிப்பதற்குள் காமராசர் என் எதிரிலே நிறுத்தப்பட வேண்டும்! நான் பேசி முடித்துவிட்டு இறங்கும் போது காமராசர் இங்கே இல்லா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய விபரீதங்களுக்கு நான் பொறுப்பாளி அல்ல"! என எச்சரிக்கை விடுத்தார்
அதைத் தொடர்ந்து அரசியல் சூழல்பற்றி பேசி முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கும் போது நீதிக்கட்சியின் சௌந்திரபாண்டியன் குழுவினரால் கடத்தப்பட்ட காமராசர் தேவரின் எதிரிலே வந்து நிறுத்தப்பட்டார்
------------------------
ஆங்கிலேய அரசு இந்தியர்கள் மீது ஆயிரம் அடக்குமுறைகளை செய்தலும்,லட்சம் கைதுகள் செய்தலும் 'வாய்பூட்டு சட்டம்' போட்டு பேசவிடாமல் தடுத்தது இருவரை.
ReplyDelete1) பாலகங்காதர திலகர்.
2)இந்த தமிழ் மண்ணிலே பிறந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
பகிர்தல்:பூபதி முருகேஷ்.
1980-81 எம் .ஜி .ஆர் ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்ட நலத்துறை அமைச்சரால் எம்.ஜி.ஆர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய தலைவர் தேவர் திருமகனாரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது -
ReplyDeleteஇராஜபாளையம் {தனி}தொகுதி முன்னாள் பார்வர்டு ப்ளாக் சட்டமன்ற உறுப்பினர் தாழ்த்தப்பட்ட {அருந்ததியர் }இனத்தை சேர்ந்த திரு .மொக்கையன் அக்கட்சியின் பிரச்சார பாடகர் தேவர் திருமகனாரை உயிரனைய நேசித்தவர் காமராஜ் அரசால் தேவர் திருமகன் சிறையில் அடைபட்டிருந்ததை கண்டு உள்ளம் கொதித்த மொக்கையன் வழிந்த கண்ணீரோடு கிராமம் கிராமாக சென்று மக்களை சந்தித்து தேவர் திருமகன் குற்றமற்றவர் என பிரச்சாரம் செய்தவர் பின்பு இராஜபாளையம் {தனி}தொகுதி முன்னாள் பார்வர்டு ப்ளாக் சட்டமன்ற உறுப்பினராக எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தேர்ந்தெடுக்கபட்டார் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தினுள் தேவர் திருமகனாரின் திருவுருவப்படம் வைக்க பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தேவர் திருமகனாரை வாழ்த்தி சட்டமன்றத்தில் அவர் பாடிய பாடல்
அதி வீரராம அரசர் குலமணியே அதிசயமான மரபு தந்த அறிவிச் சுடர்மணியே செம்பிய சோழர்குல செழும்பொன்மணியே செருவென்ற பாண்டியர் வழிவந்த மணியே விசும்பொன் பாண்டியர் வெற்றி குல மணியே பசும்பொன் நகர் தந்த முத்து ராமலிங்க மணியே தித்திக்கும் தமிழ் தத்துவமெல்லாம் கற்றுத் தெளிந்த தங்கம் பக்தியுடன் அருள் தத்துவமெல்லாம் பார்த்து தெளிந்த தங்கம் சித்தியுடன் நறுமுத்தியளித்திடும் செந்தமிழ் முருகா எங்கும் தேடியலைந்தேன் எங்கே -எங்கள் தேவர் முத்து இராமலிங்கம் எங்கே முருகா பழனி முருகா திருமுருகா தேவரை போலே தமிழில் பேசிட ஜெகமேல் யாரும் உண்டா ? செய்த சேவையை போல பூமியில் யாரும் செய்திட வீரம் உண்டா ? தன்னலம் கருதா அத்தலைவரை போலே தரணியில் யாரும் உண்டா ? தத்துவம் பேசிடும் உத்தமராகிய முத்துராமலிங்கத் தேவர் எங்கே ? முருகா பழனி முருகா திருமுருகா பொன்னும் மணியும் அணியாஞான பூமியில் எங்கள் தேவர் போகக் கடலில் வீழாஜானி புண்ணிய மூர்த்தி தேவர் எண்ணிர்கரிய செல்வம் இருந்தும் ஏதும் எண்ணா தேவர் எத்தனை எத்தனை தியாகம் செய்தார் என்னருந் தெய்வம் தேவர் எங்கே முருகா பழனி முருகா திருமுருகா என்றினி அவரை காண்பேன் முருகா என் மனம் வாழும் தெய்வம் ஈடோ இணையோ இல்லாதஞான இன்பத் தமிழக தெய்வம் பாடும் சேதுமொக்கையன் போற்றிடும் பசும்பொன் வாழ்ந்திடும் தெய்வம் பக்திக்கருளும் பழனிக்குமரா பாரதம் போற்றிடும் தெய்வம் எங்கே முருகா பழனி முருகா திரு முருகா ..
இவ்வாறு திரு .மொக்கையன் சட்டமன்றத்தில் கண்ணீர்மல்க பாடல் பாடி நிறைவு செய்தவுடன் எம்.ஜி.ஆர் உடனடியாக படத்திறப்பு விழா நடத்த உத்தரவிட்டு தேவர் திருமகனின் திருவுருவப்படம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது .
இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் ‘அரிஜன ஆலயப் பிரவேச உரிமை’ சட்டமாக்கப்பட்டது.ஆங்காங்கே ஆலயப் பிரவேசம் நடந்தது,மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் ஆலயப் பிரவேசம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
ReplyDeleteஉயர்சாதியினர் இதை கடுமையாக எதிர்த்தனர்,அரிவாள்,வேல்கம்பு என ஆயுதம் கொண்டு இதை தடுக்க முயன்றனர்,இதை அரசாங்க அதிகாரிகள் பசும்பொன் தேவர் அவர்களிடம் கூறி அசம்பாவிதம் நடக்காமல் உதவ கேட்டனர்.அப்போது தேவருக்கும் ராஜாஜி அரசுக்கும் நல்ல உறவு இல்லை,ஆனால் தேவர் இந்த நல்ல விசயத்தில் அரசியலை கலக்க நினைக்கவில்லை.அன்று ஒரு அறிக்கை வெளியானது,பத்திரிக்கையில் அல்ல,அது ஒரு சாதாரண துண்டு பிரசூரம்.
“அரிஜனங்கள் ஆலயப் பிரவேசம் செய்ய முற்படும்போது உயர் சாதியினரால் ஏற்பாடு செய்யப்பட ரௌடிகள் அவர்களை தாக்கி ரத்தக்கறை ஆக்க திட்டமிட்டு இருப்பதாக கேள்விப்படுகிறேன்.அந்த ரௌடி கும்பலை எச்சரிக்கிறேன்,நானும் அவர்களோடு வருவேன்,ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உங்களை சந்திக்கவேண்டிய உரியமுறையில் சந்திப்பேன்”
ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது.இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,அன்றைய தினம் அனைத்து கோவில்களும் பணத்தில் கொளுத்த உயர்சாதியினர் வசமே இருந்தது,அவர்கள் காவல்துறையை விட பலம் உடையவர்களாக திகழ்ந்தனர்,அன்றைய முதல்வர் ராஜகோபாலச்சாரி என்னும் ராஜாஜி அந்த அளவு அரிஜனங்கள் மீது பற்று கொண்டவர் அல்ல,அன்றைய தினம் தேவர் இந்த விசயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் போலீசை வைத்து துப்பாக்கி சூடு நடத்தி ஆலயத்திற்குள் அழைத்து சென்றிருக்க மாட்டார்,அந்த முயற்சியை கைவிட்டு இருப்பார்.
தேவர் நினைத்திருந்தால் காங்கிரஸ் அரசு செய்யும் இந்த முயற்சிக்கு ஆதரவு தராமல் ஒதுங்கி இருக்கலாம்,ஆனால் அவர் அரிஜனங்கள் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார்.இதன் காரணமாகவே யில் சாதி சண்டையாக மாற்றப்பட்ட காங்கிரஸ்- பார்வர்ட் ப்ளாக் சண்டையிலும் கிழவக்குடும்பன் போன்ற எண்ணற்ற தேசத் தியாகிகள் சாதியை கடந்து இறுதி வரை தேவருடனே இருந்து உயிரை விட்டனர்.
“நீ திறந்துவிட்ட கோவிலுக்குள் நுழைந்தவர்கள் மறக்கலாம்,
தென்மதுரை அன்னை தெய்வம் மீனாட்சி மறப்பாளோ?”
-பூபதி முருகேஷ்.
1939-ல் ஜூன் 22-ஆம் தேதி பார்வர்ட் பிளாக் கட்சியை ஆரம்பித்த நேதாஜி அதில் பசும்பொன் தேவ்ரை ஸ்தாபன உறுப்பினராக அறிவித்தார்.
ReplyDeleteஅதே 1939-ல் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னைக் கடற்கரையில் நடந்த பார்வர்ட் பிளாக் மாபெரும் கூட்டத்தில் கடற்மணலில் ஆரவாரமிட்டுக் கொண்டிருந்த மக்களிடம்......
"பார்வர்ட் பிளாக் கட்சியின் சென்னை மகாணத் தலைவராக "தென்னாட்டு போஸ்" பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் செயல்படுவார்" என நேதாஜி அறிவித்தார்.
தன்னைப் போல் பெரும் தேசப்பற்றும்...
சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தும் வீரமும்...
தேச விடுதலைக்காக உயிரையும் விடும் துணிவும்..
அந்நியனை அடித்துவிரட்டி வாங்குவதே சுதந்திரம் என்னும் கொள்கையும்..
இருவருக்கும் இருந்த ஒத்த எண்ணத்தால் ..
தேவரை தன்னைப்போலவே பாவித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!
காந்தியின் நடவடிக்கையை வைத்து "உங்களுக்கு இயற்கை மரணம் இராது" என காந்திடமே கூறிய பிரபல வழக்கறிஞரும்,பெரும் சுதந்திர போராட்டத் தலைவருமான எஸ்.சீனிவாசய்யங்கார் அதே மேடையில் தேவரை பெரும் வீரர் என வாழ்த்தினார்.
பகிர்தல்: ஆர்.தியாகு
உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் பசும்பொன் தேவருக்கு மதுரையில் தனது நிருபர் மூலம் வழங்கிய வாழ்த்து ,அது...
ReplyDelete" தேசச் சரித்திரத்தில் இவ்வளவு அகண்ட ஒரு பகுதியில் தன்னுடைய தொகுதியில் சரியாகச் சுற்றுப்பயணம் செய்யாமலும் ,
சுற்றுப்பயணம் செய்கிற காலத்தில் தனக்கு கீழ் இருக்கிற
எம் .எல். ஏ.க்களுக்கு மாத்திரம் ஒட்டுக் கேட்டு விட்டு ,
தனக்கு ஓட்டுப் போடும்படி கேட்க மறந்தும்.. பிரசங்கம் பண்ணியும் ,
தனது எம் எல் ஏ தொகுதிக்கு போகாமலேயும் ,
ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்ற சரித்திரம் எங்கும் கிடையாது .
இது ஜனநாயகத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு .
இப்படி இருப்பது தேசத்துக்கு நல்லது ".
-பகிர்தல்: விக்னேஷ் (Vignesh Tuticorin)
"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல் லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று பதில் அளித்தேன்."
ReplyDeleteஇவ்வாறு அண்ணா கூறினார்.
ngkkgf16@gmail.com
ReplyDelete