கள்ளர் குலம்.

கள்ளர்
பழங்கால நீண்ட நெடிய கள்ளர் குல வரலாற்றுச் செய்திகளை அரைகுறையாக குறிப்பிடும் நிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. இக்குறையை போக்கும் வண்ணம் வரலாற்றுச் செய்திகளுக்கு முக்கியத்துவமளித்து கல்வெட்டுச் செய்திகள், செப்புப் பட்டயச் செய்திகள், செங்கோல் ஆட்சிபுரிந்து சாதனை படைத்த மாமன்னர்களின் பெருமை மிகு வரலாறு, கோயில்களின் வரலாறு மற்றும் ஊர்பெயர்களின் வரலாறு போன்ற தொன்மை மிகு சான்றுகளை மையமாக வைத்து நெறியான கள்ளர் குல வரலாற்றை தொகுத்துள்ளோம்.

கள்ளர் குலம்.
உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

கள்ளரினமொரு வரலாற்றுப் பாரம்பரிய மிக்க இனம். ஏராளமான வரலாற்று ஆதரங்களை கொண்ட இனம். உலகவரலாற்றில் கள்ளரினத்தை மிஞ்சும் அளவுக்கு ஆதரங்களை கொண்ட வேறு எந்த இனமும் இல்லை என்பதும் வரலாறு. இவ்வளவு ஆதரங்களை கொண்ட கள்ளரினத்தை கள்ளரின மக்களே அறியவில்லை என்பதும் அறிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்பது தான் என் வருத்தம். கள்ளர் வரலாறு, கள்ளர்களின் வரலாறு மட்டுமல்ல, தமிழ், தமிழர், தமிழகத்தின் வரலாறும் அடங்கியிருப்பதும் ஒரு வரலாறு.

கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்

திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்

திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர்ஸ்பென்சர்வெல்மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம்கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார். எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும் என்றும் கூறுகிறார்.

உலக வரலாற்றில் தொடர்ந்து 433 ஆண்டுகள் (கி.பி 846 முதல் கி.பி. 1279) ஆண்ட இனமும் கள்ளரினமே. கள்ளரின நாகரீகம் மிகவும் பழைமையானது என்று வரலாறு ஏற்றுக்கொள்கிறது. அரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.

நன்றி அண்ணன் அறிவுடை நம்பி .....

No comments:

Post a Comment

Ads

Ads