1747-நத்தம் கணவாய் யுத்தத்தில் வெள்ளைய படைகளை விரட்டியடித்த மேலூர் பகுதி கள்ளர்கள்

மதுரை நகரத்தினை சுற்றியிருக்கும் கள்ளர்நாடுகள் மனித அரண்களாக அமைந்திருந்தன அவற்றை தாண்டி வரும் எந்த படையாலும் பெருத்த சேதத்திற்குப் பின்பே மதுரை நகரத்தினை வந்தடைய முடியும் 



அக்காலத்தில் மதுரையை நோக்கி வரும் படைகள் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல் தன்னாட்சி குழுக்களாய் இருந்து வந்த கள்ளர்களுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது .கள்ளர்கள் மூர்க்கதனமானவர்களாகவும் எளிதில் கட்டு படுத்த முடியாதவர்களாகவும் இருந்ததால் அவர்களை ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் ஈவு இரக்கமற்ற முறைகளை கையாண்டனர் இவ்வகை தாக்குதல்கள் பெரும்பாலும் கிழக்குநாட்டு கள்ளர்கள் {அம்பலகாரர்கள் } மீதே நடத்தப்பட்டன

ஏனெனில் மேலூர் கள்ளர் நாடுகள் மதுரை நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்தததினாலும் தென் பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அவற்றை கடந்து செல்ல வேண்டி இருந்ததினாலும் மதுரையை தாக்க வரும் படைகளும் தெற்கிலுள்ள பாளயகாரர்களை தாக்க செல்லும் படைகளும் அவர்களை கடந்துதான் செல்ல வேண்டி இருந்தது அப்போது அவர்கள் கள்ளர்களோடு மோத வேண்டிய நிலை ஏற்பட்டது தாங்கள் வாழ்கின்ற பகுதிகளை தங்கள் அனுமதியின்றி கடந்து செல்பவர்களை தாக்கி பழக்கப்பட்ட கள்ளர்கள் இயல்பாகவே ஆங்கிலேயே படைகளையும் தாக்க துவங்கினர் 

இவ்வகை மோதல்கள் கி .பி 1747ல் முகமது அலி நாயக்கர்களின் ஆதிக்கத்தை மதுரையில் மீண்டும் ஏற்படுத்த விரும்பி தெற்கத்தி பாளையகாரர்களையும் மறவர்களையும் ஒடுக்குவதற்காக தனது தம்பி மாபூஸ்கான் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார் அப்படை நத்தம் கணவாய் தாண்டி கள்ளர்நாடுகளை கடந்து சென்ற போது கள்ளர்கள் அதனை மிக கொடூரமாக தாக்கி சிதறடித்தனர் இதனால் நிலை குலைந்து போன மாபூஸ்கான் தனது படையெடுப்பு திட்டத்தை கைவிட்டு திருச்சியை நோக்கி உயிர் தப்பி ஓடினான் 

பின்பு முகமது அலி தானே படைக்கு தலைமை தாங்கி பெரும்படையுடன் தெற்குநோக்கி வந்தார் அவர் கள்ளர் நாடுகளை வெற்றிகரமாக கடந்து தெற்கு நோக்கி சென்று பல பாளையகாரர்களை வென்று மதுரையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார் பின்பு அப்படை திருச்சி திரும்பி செல்லும் வழியில் நத்தம் கணவாய்க்கு அருகில் கள்ளர்கள் அவரை மீண்டும் தாக்கி அவரது படையை நிர்மூலமாக்கினர் அத் தாக்குதலில் நவாப் முகமது அலி மயிரிழையில் உயிர் தப்பினார் {ஆதாரம் -Dr.k.Rayappan-History of madurai} அதனால் நவாப் ஆங்கிலேய கூட்டு படையினர் எப்பொழுதும் கள்ளர்களை நினைத்து அஞ்சி நடுங்கினர்

கள்ளர்களை பற்றி அவர்கள் பின்வரும் வரிகளில் குறிப்பிடுகின்றனர் .

கள்ளர் நாடுகள் பயங்கரமான குடிமக்களை உள்ளடக்கியதாகும் அவர்கள் நாகரீகமற்ற அரைகாட்டுமிராண்டிகளைப்போல் உள்ளனர் அவர்கள் தீப்பந்து நாட்டு வெடிகுண்டு போன்ற நெருப்பு ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர் .மேலும் கூர்மையான வேல்கம்புகளும் வலைத்தடிகளுமே இவர்களது முக்கிய ஆயுதங்களாகும் அவற்றை கொண்டு குதிரைகளுக்கும் வீரர்களுக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றனர் அவர்களில் ஒரு சிலர் காடுகளுக்கும் புதர்களுக்கும் தீ வைத்துக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் வேல் கம்புகளுடன் மலைகளில் குரங்குகளை போல் பாறை விட்டு பாறை தாவி பயங்கரமாக ஊளையிட்டு கொண்டும் அலறிக்கொண்டும் பெரும் சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே எதிரிகளை தாக்குகின்றனர் என Tamilakam in the 17th century-என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது .

நன்றி -பிரமளைகள்ளர் வாழ்வும் வரலாறும் -நூலாசிரியர் சுந்தர வந்திய தேவன்

1 comment:

Ads

Ads