கள்ளர்களின் ரத்த சரித்திரம்

கள்ளர்களின் ரத்த சரித்திரம்வானம் பொழிகிறது-பூமி விளைகிறது உனக்கு ஏன் ?கொடுக்கவேண்டும் வரி என கட்டபொம்மன் சொல்வதற்கு முன்பே ஆங்கிலேயே அடக்குமுறைக்கு அஞ்சாமல் வரி கொடுக்கமறுத்து வெள்ளையனை எதிர்த்து வீரச்சமர் புரிந்த வீரம் செறிந்த வெள்ளலூர் நாட்டு 1767 ல் கேப்டன் ரூம்லே என்ற ஆங்கில தளபதி மேலூர் கள்ளர்களை தாக்கி அவர்களிடம் வரிவசூல் செய்ய
முயற்சித்தார் அவர்கள் வரிசெலுத்த மறுத்தனர் அவர்கள் வரி செலுத்த மறுத்ததை மனதில் வைத்துகொண்டு ரூம்லே அவர்களை கொடூரமாக தாக்க துவங்கினான் வெள்ளலூர் நாட்டு பகுதியில் இருந்த கள்ளர் கிராமங்களை தாக்கி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட சுமார் 3000 கள்ளர்களை ஒரே நாளில் படுகொலை செய்தான் அதன் பின்பும் அவர்கள் வரி செலுத்த மறுத்ததோடு ரூம்லேயின் உதவியாளர்கள் 10 பேரை படுகொலை செய்து பதிலடி கொடுத்தனர் இதனால் ஆத்திரமடைந்த ரூம்லே மறுபடியும் தாக்கி 2000பேர்களை படுகொலை செய்தான் இவ்வாறு மொத்தம் 5000 கள்ளர்களை படுகொலை செய்து ஒரு இன படுகொலையை அரங்கேற்றினான் கேப்டன் ரூம்லே வெள்ளையனுக்கு வரி செலுத்த மறுத்து தூக்கில் இடப்பட்ட மன்னர்கள் வரலாற்றில் நிற்கின்றனர் ஆனால் அதேபோல் வரிசெலுத்த மறுத்து கொல்லப்பட்ட 5000 பேர்களை வரலாறு மறந்து விட்டது ஏனெனில் அவர்கள் அனைவரும் மன்னர்கள் இந்த 5000 பெரும் சாதாரண {போர் }குடிகள் . சிறுகுடி நாட்டை வடக்கு எல்லையாகவும் அஞ்சூர் நாட்டை தெற்கு எல்லையாகவும் மல்லாகோட்டை நாட்டை கிழக்கு எல்லையாகவும் நடுவி நாட்டை மேற்கு எல்லையாகவும் கொண்டு அமைந்திருப்பது வெள்ளலூர் நாடாகும் இந்த நாடு தற்போது மேலூர் தாலுகாவின் தென்கிழக்கு பகுதியிலும் சிவகங்கை தாலுகாவின் மேற்கு பகுதியிலும் பரவி அமைந்திருகின்றது இவர்களின் மூதாதையர்கள் வடவேங்கிட நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து குடியேறியதாக மரபுவழி கதைகள் கூறுகின்றன இந்நாடு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய அழிவிற்கு உள்ளாகி இருக்கிறது நாட்டில் உள்ள அனைவரும் சிதறி ஓடி விட்டனர் வீரணன் அம்பலகாரர் என்பவர் இந்தப் பேரழிவில் இருந்து தப்பியவர்களை ஒன்று திரட்டி முறை படுத்தினார் இது வெள்ளலூர் மாகாணம் அம்பலகாரன்பட்டி மாகாணம் மலம்பட்டி மாகாணம் உறங்கான்பட்டி மாகாணம் குறிச்சிப்பட்டி என 5மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . இந்த 5 மாகாணங்களில் பரவி வாழும் கள்ளர் இன மக்கள் தந்தை வழியில் முண்டவாசிகரை வேங்கைபுலிகரை சம்மட்டிகரை நைகான்கரை சாயும்படை தாங்கிகரை வெக்காலிகரை சலிபுலிகரை திருமான்கரை செம்புலிகரை கோப்பன்கரை மழவராயன்கரை என 11 கரைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் இங்கு ஒவ்வொரு கரைக்கும் இரண்டு அம்பலம் என 24அம்பலகாரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் ஒவ்வொரு கரைக்கும் 2 இளங்கச்சிகள் தெரிவு செய்யப்படுகின்றனர் இளங்கச்சிகள் என்பவர்கள் அம்பலகாரர்களுக்கு உதவியாளர்கள் ஆவர் இந்நாட்டின் பெரிய அம்பலகாரர் கரை அடிப்படையில் இந்த 11கரைகாரர்களுக்குள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படுகிறார் இவரே கரை அம்பலங்களின் கூட்டத்திற்கும் நாட்டுக்கூட்டத்திற்கும் தலைமை வகுக்கின்றார் இவரது முடிவே இறுதியானதாக கருதப்படுகின்றது .வெள்ளலூர் நாடு சிதைவுற்று முறைபடுத்தப்பட்ட காலத்திற்கு பின்பு இதுவரை 10 பெரிய அம்பலகாரர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர் . ஏழை காத்த அம்மன் கோவிலும் வல்லடிகாரர் கோவிலும் இந்நாட்டின் பொது கோவிலாகும் இவற்றிக்கு முறையே புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் 10 நாள்கள் விழா எடுத்து சிறப்பிக்கின்றனர் . நன்றி -பிறமலை கள்ளர் வாழ்வும் -வரலாறும் ஆசிரியர் சுந்தர வந்தியத்தேவன்

No comments:

Post a Comment

Ads

Ads