உலகில் முதல் பெண்கள் படையை அமைத்த நேதாஜி

thevar media- mukkulathormedia

ஜான்சி ராணி படை என்பது 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவாகும். 



இந்திய தேசிய ராணுவத்தின் ஆண்கள் படை போல் அல்லாமல் இந்த ஜான்சி ராணி படை முற்றிலும் வெளிநாட்டு இந்தியப் பெண்களை வைத்தே அமைக்கப்பட்டது.

20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர்.

18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்பது விதி என்றாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள பெண்களும் இப்படையில் உண்மையை மறைத்து இடம்பெற்றதாக கருதப்படுகிறது.

இதில் உள்ள நிறைய பெண்கள் தங்கள் தங்க நகைகளை படையின் பொருளாதாரத்துக்காக தானம் தந்தனர்.

இப்படையில் தமிழர்கள்-
லட்சுமி சுவாமிநாதன் - உருவாக்கியவர் (சென்னை மாகாணம்)
ஜானகி ஆதி நாகப்பன் - துணைத்தளபதி (மலேசியத் தமிழர்)
கோவிந்தம்மாள் - வட ஆர்க்காட்டைச் சேர்ந்த மலேசியத் தமிழர். படையின் உயரிய சேவையின் விருதான லாண்ட்சு நாயக் விருதைப் பெற்றவர்
ராசம்மா பூபாலன் - மலேசியத் தமிழர்

பகிர்தல்: ஆர்.தியாகு

No comments:

Post a Comment

Ads

Ads