நேதாஜியின் படையில் வீர பெண் ஜானகி!

mukkulathormedia

சுபாஷ் சந்திர போஸ், மலாயாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின்
விடுதலைக்குத் தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே ஜானகி ஆதி நாகப்பன், தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக்கொடுத்தார்.

இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என்றும் முடிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 18.

அவருடைய குடும்பத்தில் இருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி ஆதி நாகப்பனின் தந்தையாருக்கு இது பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.

முதல் நாள் படையிற் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி ஆதி நாகப்பன் அழுததாகவும் சொல்லப்படுகின்றது. ஜானகி ஆதி நாகப்பனாற் போர்ப்படையின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறி முறைகளுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. தொடக்க காலத்தில் மிகவும் அவதியுற்றார்.

படை அதிகாரிகளுக்கான தேர்வில் ஜானகி ஆதி நாகப்பன் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

சில குறிப்புகள்:
இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்.
ம.இ.காவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார்.

பகிர்தல்: ஆர்.தியாகு

No comments:

Post a Comment

Ads

Ads