தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேவர் திருவுருவப்படம்

1980-81 எம் .ஜி .ஆர் ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்ட நலத்துறை அமைச்சரால் எம் .ஜி .ஆர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய தலைவர் தேவர்
திருமகனாரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது - இராஜபாளையம் {தனி}தொகுதி முன்னாள் பார்வர்டு ப்ளாக் சட்டமன்ற உறுப்பினர் தாழ்த்தப்பட்ட {அருந்ததியர் }இனத்தை சேர்ந்த திரு .மொக்கையன் அக்கட்சியின் பிரச்சார பாடகர் தேவர் திருமகனாரை உயிரனைய நேசித்தவர் காமராஜ் அரசால் தேவர் திருமகன் சிறையில் அடைபட்டிருந்ததை கண்டு உள்ளம் கொதித்த மொக்கையன் வழிந்த கண்ணீரோடு கிராமம் கிராமாக சென்று மக்களை சந்தித்து தேவர் திருமகன் குற்றமற்றவர் என பிரச்சாரம் செய்தவர் பின்பு இராஜபாளையம் {தனி}தொகுதி முன்னாள் பார்வர்டு ப்ளாக் சட்டமன்ற உறுப்பினராக எம் .ஜி .ஆர் ஆட்சி காலத்தில் தேர்ந்தெடுக்கபட்டார் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தினுள் தேவர் திருமகனாரின் திருவுருவப்படம் வைக்க பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தேவர் திருமகனாரை வாழ்த்தி சட்டமன்றத்தில் அவர் பாடிய பாடல் அதி வீரராம அரசர் குலமணியே அதிசயமான மரபு தந்த அறிவிச் சுடர்மணியே செம்பிய சோழர்குல செழும்பொன்மணியே செருவென்ற பாண்டியர் வழிவந்த மணியே விசும்பொன் பாண்டியர் வெற்றி குல மணியே பசும்பொன் நகர் தந்த முத்து ராமலிங்க மணியே தித்திக்கும் தமிழ் தத்துவமெல்லாம் கற்றுத் தெளிந்த தங்கம் பக்தியுடன் அருள் தத்துவமெல்லாம் பார்த்து தெளிந்த தங்கம் சித்தியுடன் நறுமுத்தியளித்திடும் செந்தமிழ் முருகா எங்கும் தேடியலைந்தேன் எங்கே -எங்கள் தேவர் முத்து இராமலிங்கம் எங்கே முருகா பழனி முருகா திருமுருகா தேவரை போலே தமிழில் பேசிட ஜெகமேல் யாரும் உண்டா ? செய்த சேவையை போல பூமியில் யாரும் செய்திட வீரம் உண்டா ? தன்னலம் கருதா அத்தலைவரை போலே தரணியில் யாரும் உண்டா ? தத்துவம் பேசிடும் உத்தமராகிய முத்துராமலிங்கத் தேவர் எங்கே ? முருகா பழனி முருகா திருமுருகா பொன்னும் மணியும் அணியாஞான பூமியில் எங்கள் தேவர் போகக் கடலில் வீழாஜானி புண்ணிய மூர்த்தி தேவர் எண்ணிர்கரிய செல்வம் இருந்தும் ஏதும் எண்ணா தேவர் எத்தனை எத்தனை தியாகம் செய்தார் என்னருந் தெய்வம் தேவர் எங்கே முருகா பழனி முருகா திருமுருகா என்றினி அவரை காண்பேன் முருகா என் மனம் வாழும் தெய்வம் ஈடோ இணையோ இல்லாதஞான இன்பத் தமிழக தெய்வம் பாடும் சேதுமொக்கையன் போற்றிடும் பசும்பொன் வாழ்ந்திடும் தெய்வம் பக்திக்கருளும் பழனிக்குமரா பாரதம் போற்றிடும் தெய்வம் எங்கே முருகா பழனி முருகா திரு முருகா இவ்வாறு திரு .மொக்கையன் சட்டமன்றத்தில் கண்ணீர்மல்க பாடல் பாடி நிறைவு செய்தவுடன் எம் .ஜி .ஆர் உடனடியாக படத்திறப்பு விழா நடத்த உத்தரவிட்டு தேவர் திருமகனின் திருவுருவப்படம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது .

No comments:

Post a Comment

Ads

Ads