இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் ‘அரிஜன ஆலயப் பிரவேச உரிமை’ சட்டமாக்கப்பட்டது.ஆங்காங்கே ஆலயப் பிரவேசம் நடந்தது,மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் ஆலயப் பிரவேசம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
உயர்சாதியினர் இதை கடுமையாக எதிர்த்தனர்,அரிவாள்,வேல்கம்பு என ஆயுதம் கொண்டு இதை தடுக்க முயன்றனர்,இதை அரசாங்க அதிகாரிகள் பசும்பொன் தேவர் அவர்களிடம் கூறி அசம்பாவிதம் நடக்காமல் உதவ கேட்டனர்.அப்போது தேவருக்கும் ராஜாஜி அரசுக்கும் நல்ல உறவு இல்லை,ஆனால் தேவர் இந்த நல்ல விசயத்தில் அரசியலை கலக்க நினைக்கவில்லை.அன்று ஒரு அறிக்கை வெளியானது,பத்திரிக்கையில் அல்ல,அது ஒரு சாதாரண துண்டு பிரசூரம்.
“அரிஜனங்கள் ஆலயப் பிரவேசம் செய்ய முற்படும்போது உயர் சாதியினரால் ஏற்பாடு செய்யப்பட ரௌடிகள் அவர்களை தாக்கி ரத்தக்கறை ஆக்க திட்டமிட்டு இருப்பதாக கேள்விப்படுகிறேன்.அந்த ரௌடி கும்பலை எச்சரிக்கிறேன்,நானும் அவர்களோடு வருவேன்,ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உங்களை சந்திக்கவேண்டிய உரியமுறையில் சந்திப்பேன்”
ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது.இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,அன்றைய தினம் அனைத்து கோவில்களும் பணத்தில் கொளுத்த உயர்சாதியினர் வசமே இருந்தது,அவர்கள் காவல்துறையை விட பலம் உடையவர்களாக திகழ்ந்தனர்,அன்றைய முதல்வர் ராஜகோபாலச்சாரி என்னும் ராஜாஜி அந்த அளவு அரிஜனங்கள் மீது பற்று கொண்டவர் அல்ல,அன்றைய தினம் தேவர் இந்த விசயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் போலீசை வைத்து துப்பாக்கி சூடு நடத்தி ஆலயத்திற்குள் அழைத்து சென்றிருக்க மாட்டார்,அந்த முயற்சியை கைவிட்டு இருப்பார்.
தேவர் நினைத்திருந்தால் காங்கிரஸ் அரசு செய்யும் இந்த முயற்சிக்கு ஆதரவு தராமல் ஒதுங்கி இருக்கலாம்,ஆனால் அவர் அரிஜனங்கள் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார்.இதன் காரணமாகவே யில் சாதி சண்டையாக மாற்றப்பட்ட காங்கிரஸ்- பார்வர்ட் ப்ளாக் சண்டையிலும் கிழவக்குடும்பன் போன்ற எண்ணற்ற தேசத் தியாகிகள் சாதியை கடந்து இறுதி வரை தேவருடனே இருந்து உயிரை விட்டனர்.
“நீ திறந்துவிட்ட கோவிலுக்குள் நுழைந்தவர்கள் மறக்கலாம்,
தென்மதுரை அன்னை தெய்வம் மீனாட்சி மறப்பாளோ?”
-பூபதி முருகேஷ்.
hi frds.
ReplyDeletehi super
ReplyDelete